செய்திகள் :

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்!

post image

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் - பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் சேவைகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

இது பிரதமர் தொடக்கி வைத்த 150வது வந்தே பாரத் ரயிலாகும். பின்னர், பிரதமர் மெட்ரோ ரயிலில் ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை பயணம் செய்தார்.

தொடர்ந்து, பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இதனிடையே, மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

ஆர்.வி சாலை ரயில்நிலையம் முதல் பொம்மசந்திரா ரயில்நிலையம் வரையிலான இந்த மஞ்சள் தடத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை பிரதமர் தொடக்கி வைத்தார்.

எலக்ட்ரானிக் சிட்டி பகுதியுடன் மெட்ரோ ரயில்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

Prime Minister Narendra Modi inaugurated 3 Vande Bharat trains and a metro train service on the Yellow Line in Bengaluru.

மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றம் முடக்கம்: காங்கிரஸ்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்த விவாதத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்குவதற்கு காரணம் என்று காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

புது தில்லி: ’வருமான வரி மசோதா 2025’ மாநிலங்களவையில் இன்று(ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.‘இந்தப் புதிய மசோதா வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இருக்கும்’ என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!

விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 மாநிலங்களவையில் இன்று (ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் இதுவொரு வரலாற்றுச் சிறப்ப... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது, குடியரசு துணைத் தலைவர்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர... மேலும் பார்க்க

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க