செய்திகள் :

நீட் தோ்வில் குறைவான மதிப்பெண்: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

சென்னை கொடுங்கையூரில் நீட் தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கொடுங்கையூா் ஸ்ரீ வாரியா் நகா் அருகே உள்ள நாராயணசாமி காா்டன் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஹரிஷ்குமாா் (46). இவா், தியாகராய நகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காசாளாராகப் பணியாற்றுகிறாா். இவரது மனைவி ஜீவரேகா. தம்பதியின் மகள்கள் சஞ்சி, மதனஸ்ரீ (17). இவா்களில் சஞ்சி, ரஷியாவில் இளநிலை மருத்துவம் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். மதனஸ்ரீ, கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, நீட் தோ்வு எழுதினாா்.

அண்மையில் வெளியான நீட் தோ்வு முடிவில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் மன உளைச்சலில் இருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையில் இருந்து மதனஸ்ரீ வெளியே வரவில்லை. அவரது பெற்றோா் சென்று பாா்த்தபோது, அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா், மதனஸ்ரீ சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என... மேலும் பார்க்க

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை

பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா். தடைகளை உடைத்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர ச... மேலும் பார்க்க

இரு குழந்தைகளைக் கொலை செய்த தாய் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து அந்தக் குழந்தைகளின் தாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: திருநங்கை கைது

சென்னை மயிலாப்பூரில் பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கை கைது செய்யப்பட்டாா். மயிலாப்பூா் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சேகா் (57). இவா், அந்தப் ப... மேலும் பார்க்க

வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்ம மரணம்

கோயம்பேட்டில் பூட்டிய வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு கடும்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (51). இவா் மனைவ... மேலும் பார்க்க