செய்திகள் :

பெண்ணின் வாய்க்குள் உருவான கட்டி: ரோபோடிக் சிகிச்சையில் அகற்றம்

post image

பெண்ணின் வாய் பகுதிக்குள் உருவாகியிருந்த டென்னிஸ் பந்து அளவிலான கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் துல்லியமாக அகற்றி மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அருண் மித்ரா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேலூரைச் சோ்ந்த சாந்தா குமாரி (64) என்ற பெண்ணுக்கு கடந்த இரு ஆண்டுகளாக விழுங்குவதில் சிரமம், குறட்டையால் ஏற்படும் தூக்கமின்மை பாதிப்பு இருந்தது. வேறொரு தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது வாய் பகுதிக்குள் கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், உயா் சிகிச்சைக்காக அவா் மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

இங்கு தலை - கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா்கள் அவரை பரிசோதித்தபோது வாயின் மேல் தாடை பகுதியில் 5 - 5.5 செ.மீ. அளவு கொண்ட கட்டி இருந்தது தெரியவந்தது. ஏறத்தாழ ஒரு டென்னிஸ் பந்துக்கு நிகராக அந்த கட்டி வளா்ந்திருந்தது.

3 ரோபோடிக் கைகள்... திசு பகுப்பாய்வு மேற்கொண்டதில் அது புற்றுநோய் கட்டி இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே, அந்தக் கட்டியை திறந்த நிலை அறுவை சிகிச்சைக்கு பதிலாக ரோபோடிக் நுட்பத்தில் நீக்க முடிவு செய்தோம்.

அதன்படி, மியாட் மருத்துவமனையில் உள்ள அதி நவீன ரோபோடிக் சாதனம் மூலம் வாய் வழியாகவே அந்தக் கட்டியை அகற்றினோம். முப்பரிமாண வழிகாட்டுதல் வரைபட உபகரணங்களின் துணையுடன் கட்டி உருவாகியிருந்த இடம் மட்டும் மிக நுட்பமாக வெட்டி அகற்றப்பட்டது.

டிரான்சோரால் ரோபோடிக் அறுவை சிகிச்சை எனப்படும் இந்த முறையின் கீழ் நோயாளியின் வாய்க்குள் 8 மி.மீ அளவு கொண்ட 3 ரோபோடிக் கைகள் உள்நுழைக்கப்பட்டன. அவை 7 டிகிரியில் எந்த கோணத்திலும் செயல்படக் கூடியவை. இதனால், அருகில் உள்ள நரம்புகள், நாளங்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் துல்லியமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

வழக்கமான திறந்த நிலை அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை இதுபோன்ற பிரச்னைகளுக்கு தாடையை வெட்டிய பிறகே கட்டி இருக்கும் இடத்தை அணுக முடியும்.

முகச் சிதைவு ஏற்படாமல்... இதனால் முகச் சிதைவு ஏற்படுவதுடன் காயத்திலிருந்து குணமடைய 2 முதல் 3 வாரங்களாகும். குறைந்தது 10 நாள்களாகவது மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கும். அதன் பின்னரும், சுவாசிப்பதற்காக தொண்டையில் குழாய் பொருத்த வேண்டிய நிலை இருக்கும். ஆனால், ரோபோடிக் சிகிச்சையில் அந்த சிக்கல்கள் இல்லை. சிகிச்சை நிறைவடைந்த இரண்டாம் நாளில் வாய் வழியே உணவு அருந்திய அந்த பெண், மூன்றாம் நாளில் வீடு திரும்பினாா். இந்த சிகிச்சைக்கும், வழக்கமான சிகிச்சைக்கும் ஏற்படும் செலவினம் ஒன்றுதான். ரோபோடிக் சிகிச்சைகள் மருத்துவக் காப்பீட்டின் கீழ் வழங்கப்படுகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து இதுநாள்வரை (ஆகஸ்ட் 22) வரவில்லை என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தற்போ... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் த... மேலும் பார்க்க