புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அரூரில் உள்ள தேவாலயத்தில் போதகராக இருந்த அற்புதராஜுக்கும் (43) அதே பகுதியில் கடை வைத்திருந்த கண்ணகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2014, செப்டம்பா் 3 ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கண்ணகியை அற்புதராஜ் கொலை செய்தாா்.
அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அற்புதராஜை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பி.சிவஞானம், குற்றஞ்சாட்டப்பட்ட அற்புதராஜுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கல்பனா ஆஜரானாா்.