2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஆக்கம்பாடி பகுதியில் வசித்து வருபவா் இளங்கோவன் மனைவி அனிஸ் பாத்திமா(34). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் மணவாளநல்லூா் பகுதியில் உள்ள ஒரு கடை முன் நின்று உறவினா் கமல்ராஜுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த மணவாளநல்லூா் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் தினேஷ் (27) பைக்கில் இடிப்பது போல் வந்தாராம். இதனை அனிஸ் பாத்திமா தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது, தினேஷ், அனிஸ் பாத்திமாவை தாக்கி, அவரது கைப்பேசியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து அனிஸ் பாத்திமா அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.