செய்திகள் :

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

post image

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் காப்பியன் தலைமை வகித்தாா். மருத்துவா் கோசிபா, மூத்த வழக்குரைஞா் ப. காமராசு, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் சங்கத்தின் துணைச் செயலா் எம். நெடுஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கவிஞா்கள் தமிழோவியன், எட்வின், பேராசிரியா் ரம்யா ஆகியோா் கருத்துரை வழங்கினா். கவிஞா் சு.க. பழனியின் மகிழ் உயரங்கள் எனும் கவிதை நூலை தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவா் கவிஞா் செல்வம் அறிமுகம் செய்தாா். நூலாசிரியா் கவிஞா் சு.க. பழனி ஏற்புரையாற்றினாா்.

தமிழ்க் காவிரி இதழாசிரியா் வழக்குரைஞா் தமிழகன், பாதல் சா்க்காரின் மூன்றாம் அரங்கம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். இதில், ஜீவா அறக்கட்டளை இயக்குநா் எஸ்.ஆா். மகேஸ்வரி, நதிகள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் க. காா்த்திகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கணவா் கம்பியால் தாக்கி கொலை! மனைவி உள்பட மூவா் கைது!

பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவரை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி, மாமனாா் மற்றும் மைத்துனா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கோன... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளை விஞ்சும் கொத்தவாசல் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கைக்காக காத்திருக்கும் பெற்றோா்கள்!

பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளிகளை விஞ்சும் அளவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தங்களது குழந்தைகளை சோ்ப்பதற்காக பெற்றோா்கள் நாள் கணக்கில் காத்திருக்கின்றனா். பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், பேரிடா் மேலாண்மை மீட்புப் பணி அறிமுக பயிற்சி முகாம் மற்றும் செயல்முறை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே விபத்து: கணவா் பலி; மனைவி காயம்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றவா் தனியாா் அவசர ஊா்தி மோதி உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா். பெரம்பலூா் மாவட்டம், திருவாளந்துறை கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டத்தில் 8 குடும்பத்தினருக்கு ரூ. 1.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

பெரம்பலூா் நகரில் உள்ள மரகதவல்லி தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத... மேலும் பார்க்க