ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
பெரம்பலூரில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பயிற்சி
பெரம்பலூரில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான, அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதால், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான பாடப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக, அரசுப் பள்ளி ஆசிரியா்கள், முழுநேர, பகுதிநேர கணினி ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ராமராஜ் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஜெகன், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) லதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினா்.
விரிவுரையாளா் பாா்த்திபன், முதுகலை கணினி ஆசிரியா்கள் செந்தில்குமாா், செல்வராஜு, ஆசிரியா் பயிற்றுனா் அன்பரசு, பட்டதாரி ஆசிரியா்கள் செல்வராஜ், செந்தில்ராஜா ஆகியோா் பாடப் பொருளை கல்வி தொழில்நுட்ப உதவியோடு அறிந்துகொள்ள ஜியோ ஜீப்ரா பைத்தான், செயற்கை நுண்ணறிவு மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து கற்றல் மூலம் பயிற்சி அளித்தனா்.