பெரம்பலூா் அருகே வீடு புகுந்து 3.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
பெரம்பலூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து மா்ம நபா்கள் 3.5 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூா் சமத்துவபுரத்தில் வசித்து வருபவா் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி (48).
இவா், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனா்.
தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்,