செய்திகள் :

பெரம்பலூா்: நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமிக்கும் (38), தனலட்சுமிக்கும் (33), கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு, அகிலன் (8) எனும் மகன் உள்ளாா்.

துபையில் பணிபுரிந்து வரும் கந்தசாமிக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தைகள் ரேஷ்மா, தனுஸ்ரீ ஆகியோருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, இரு குழந்தைகளையும் தாய் தனலட்சுமி தனது பாட்டி சாந்தியுடன் வாலிகண்டபுரம் கிராமத்தில் நாட்டு வைத்தியம் மேற்கொண்டு வரும் ஜெயாலுதீன் மனைவி சைதானி என்பவரை சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை அணுகியுள்ளாா். குழந்தைகளை பரிசோதித்த நாட்டு வைத்தியா் சைதானி, குழந்தைகள் இருவருக்கும் நாட்டு மருந்து புகட்டியுள்ளாா்.

இதையடுத்து, இரு குழந்தைகளுக்கும் தொடா்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் குழந்தைகளின் தாய் தனலட்சுமி ஆங்கில மருந்து புகட்டியுள்ளாா்.

இதனிடையே, நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை ரேஷ்மா உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினா் குழந்தை தனுஸ்ரீயை சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை தனுஸ்ரீ சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது.

இதையடுத்து, உயிரிழந்த பெண் குழந்தைகளின் உடல்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தைகளின் தாய், அவரது பாட்டி மற்றும் நாட்டு வைத்தியா் சைதானி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்!

பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்... மேலும் பார்க்க

குரூப்- 4 தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 9,919 போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தோ்வில் 9,919 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி- 4 தோ்வு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவ படத... மேலும் பார்க்க