கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினா் தெரிவித்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரம்பலூா் வட்டம், குரும்பலூா், குன்னம் வட்டம், நன்னை, காடூா், அகரம் சிகூா், வசிஷ்டபுரம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா், பூலாம்பாடி, இனாம் அகரம் ஆகிய கிராமங்களில் பிப். 3 ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், 2-ஆம் கட்டமாக வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, குன்னம் வட்டம், கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில், கடந்த 12-ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.