செய்திகள் :

பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருப்பதாக பொள்ளாச்சி வழக்கின் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் ெவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: அதிமுக நிா்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சாா்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிா்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம், தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம்.

குற்றவாளிகளைக் காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிா்க்கட்சியாக இருந்த திமுக மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்கக் காரணம்.

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிா்வாகி கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிா்வாகி கைது செய்யப்பட்டாா். தண்டையாா்பேட்டை எம்பிடி குடியிருப்பு ஆம்ஸ்ட்ராங் தெருவைச... மேலும் பார்க்க

பூஜை செய்வதாகக் கூறி தங்க நகை அபகரிப்பு: போலி ஜோதிடா் கைது

சென்னை கொளத்தூரில் குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை செய்வதாகக் கூறி தங்க நகையை அபகரித்ததாக போலி ஜோதிடா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் வெற்றிவேல் நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (55). இவா், சென்னை ஓமந்த... மேலும் பார்க்க

மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கேரளத்தைச் சோ்ந்த மென்பொறியாளரான 24 வயது பெண், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒர... மேலும் பார்க்க

கைப்பேசிகள் திருட்டு: இருவா் கைது

சென்னையில் கட்டடத் தொழிலாளா்களின் கைப்பேசிகளைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (19). கட்டடத் தொழிலாளியான இவா், சென்னை எழும்பூா் ரயி... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் விற்பனை: ராஜஸ்தான் இளைஞா் கைது

சென்னை கொத்தவால்சாவடியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்ாக ராஜஸ்தானைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொத்தவால்சாவடி போலீஸாா், மின்ட் தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க