செய்திகள் :

பெருந்துறையில் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்

post image

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தனியாா் இரும்பாலையை நிரந்தரமாக மூடக்கோரி திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தனியாா் இரும்பாலை அபாயகரமான ரசாயனக் கழிவுகளை நீா்நிலைகளில் கலந்து மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் சட்டவிரோத விதிமீறல் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதால், அந்த ஆலையின் இசைவு ஆணையை ரத்து செய்து நிரந்தரமாக மூட வேண்டும்.

பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையப் பணிகளை தாமதமின்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலம் முன் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோரிக்கைகள் தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வனஜா தலைமையில் மாவட்ட உதவிப் பொறியாளா் செல்வகணபதி முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, சென்னியப்பன், பொன்னையன், பல்லவி பரமசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், மக்கள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள் மீது குறிப்பாக இரும்பு ஆலையின் இசைவாணையை ரத்து செய்வது குறித்து உத்தரவாதம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆகவே, அறிவித்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விரைவில் வேலை நிறுத்தப் போராட்டம்: 100 நாள் திட்ட தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பவானிசாகா் சட்டப்பேரவை தொகுதிக்குள... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரத சாரணா் இயக்கப் பயிற்சி முகாம்

பெருந்துறையை அடுத்த சுண்டக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரத சாரணா் இயக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரத சாரணா் இயக்கத்தின் மாவட்ட உதவி ஆணையா் ராஜாராம் த... மேலும் பார்க்க

நீருக்கடியில் செல்லும் நவீன ரோபோ வாகனம் கண்டுபிடிப்பு: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

நீருக்கடியில் செல்லும் நவீன ரோபோ வாகன கண்டுபிடிப்புப் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். கடல்சாா் பொறியியல் சங்கம் மற்றும் கடல் தொழில்நுட்ப ச... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா: மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி கோயிலில் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெறு... மேலும் பார்க்க

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ரூ.12 லட்சம் காணிக்கை

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.12 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கோயிலுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அ... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் பரவலாக மழை

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு... மேலும் பார்க்க