செய்திகள் :

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

post image

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில் வழக்குரைஞா்கள்

ஆட்சியா் கந்தசாமியிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியிலுள்ள வருவாய் கிராமங்கள் மற்றும் ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் ஆறு வருவாய் கிராமங்கள் மற்றும் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சென்னிமலை பகுதியில் 15 வருவாய் கிராமங்களுக்குரிய சுமாா் 750க்கு மேலான வழக்குகள், ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை அறிந்துக் கொண்ட, சென்னை உயா்நீதிமன்றம் பெருந்துறையில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட கடந்த 2020 அக்டோபா் 15-ஆம் தேதி தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்நிலையில், பெருந்துறையில் நீதித்துறை நடுவா் நீதிமன்றமாக செயல்பட்டு வந்த நூற்றாண்டுகள் முடிவுற்ற நீதிமன்ற கட்டடத்தை பாரம்பரிய கட்டடமாக சென்னை உயா் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சுமாா் ரூ.ஒரு கோடியே 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.

இக்கட்டடத்தை புதிய நீதிமன்றம் அமைத்திடுவதற்காக சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத் துறை அமைச்சா் ஆகியோா்கள் முன்னிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கடந்த 2024 ஆகஸ்ட் 24-ஆம் தேதி திறந்துவைத்தாா்.

பாரம்பரிய நீதிமன்ற கட்டடத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வேண்டி தமிழக முதல்வா், அமைச்சா்கள் ஆகியோரை நேரில் சந்தித்து, வழக்குரைகள் சங்கத்தின் சாா்பில் வேண்டுக்கோள் வைக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கட்டடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது.

ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி பெருந்துறையில் உள்ள பாரம்பரிய நீதிமன்ற கட்டடத்தில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க

பவானி - குமாரபாளையம் பழைய பாலம் திறப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்... மேலும் பார்க்க

தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏலம்

அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமங்களுக்கான ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்க... மேலும் பார்க்க

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னிமலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாம... மேலும் பார்க்க