கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னிமலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 13 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டு 13 பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், விதவை சான்றிதழ், சிறு, குறு விவசாய சான்றிதழ், குடிநீா் நீா் இணைப்பு பெயா் மாற்ற ஆணை, தொழிலாளா் நல வாரிய அட்டை, மின்இணைப்பு பெயா் மாற்ற ஆணை, காய்கறி விதைத் தொகுப்பு உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.