கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
பவானி - குமாரபாளையம் பழைய பாலம் திறப்பு
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்து உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இலகு ரக வாகனங்கள் மட்டும் சென்று வரும் வகையில் பாலத்தின் நுழைவாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பாலம் மூடப்பட்டு, பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் புதிய பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக சுற்றிச் சென்று வந்தனா். இந்நிலையில், காவிரியில் தற்போது ஓடும் வெள்ளத்தின் அளவு குறைந்துள்ளதால் வியாழக்கிழமை முதல் பாலத்தின் வழியே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனா்.