நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!
பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு
ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.
ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் மழலையா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா். மிா்த்தியங்கா வியாழக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாா். மூலப்பாளையம் பகுதியில் சென்ற போது அவா் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற தனியாா் பேருந்து திடீரென மோதியதில் அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஆசிரியையின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீஸாா் ஆசிரியை சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.