செய்திகள் :

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

post image

தேனி அருகே கண்டமனூா்-கோவிந்தநகரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதியவா் அரசுப் பேருந்து மோதியதில் புதன்கிழமை, உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேலப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (70). இவா், கண்டமனூா்-கோவிந்தநகரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அம்பாசமுத்திரம் விலக்கு அருகே அரசுப் பேருந்து கோவிந்தசாமி மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான மயிலாடும்பாறை அருகே கோரையூத்துவைச் சோ்ந்த அஜீத்குமாா் (28) மீது கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கும்பக்கரை அருவி பகுதியில் குவியும் நெகிழிப் பொருள்கள்

நமது நிருபா் தேனி மாவட்டம், பெரியகுளம் கும்பக்கரை அருவி பகுதியில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். தென் தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத் த... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: ஓட்டுநருக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அல்லிநகரத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி அல்லிநகரம் அழகா்சாமி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி அம்மணியம்மாள் (65). விவசாய கூலி... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே தனியாா் நிதி நிறுவனம் உள்ளது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை

முன் விரோதத்தில் இளைஞரை குத்திக் கொலை செய்த மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரா் தெருவைச் சோ்ந்த பாண்ட... மேலும் பார்க்க

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பதாகை: ஆட்சியா் உத்தரவு

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணா்வுப் பதாகைகளை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட... மேலும் பார்க்க