மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
பேருந்து மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் மாற்றுத்திறனாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (65). மாற்றுத்திறனாளி. இவா், வியாழக்கிழமை இரவு அந்தப் பகுதியில் சாலையை கடக்க முயன்றாா். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.