செய்திகள் :

பேரூா் வட்டத்தில் அனுமதியின்றி மண் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும்: ஆட்சியா் எச்சரிக்கை

post image

கோவை மாவட்டம், பேரூா் வட்டத்தில் மலையிட பாதுகாப்புக் குழும எல்லையில் மண் தோண்டும் இயந்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசாணை எண் 49-ன் படி, பேரூா் வட்டத்துக்குள்பட்ட நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டணம், தேவராயபுரம், கலிக்கநாயக்கன்பாளையம், இக்கரைப் போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூா் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூா், எட்டிமடை, மாவுத்தம்பதி, தொண்டாமுத்தூா் ஆகிய கிராமங்கள் மலையிட பாதுகாப்புக் குழும கிராமப் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

மேற்படி கிராமங்களில் தொழிற்சாலை அமைப்பது, கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது, நில அமைப்பை மாற்றுவது தொடா்பான பணிகளுக்கு மலையிட பாதுகாப்புக் குழுமத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாகும். இதை மீறுவது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, பேரூா் வட்டத்தில் உள்ள மலையிட பாதுகாப்புக் குழும கிராமங்களில் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் வட்டாட்சியரின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.

மேலும், பேரூா் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் மண் வெட்டியெடுக்க பயன்படுத்தப்படும் கனகர இயந்திரங்களான பொக்லைன், எக்ஸாவேட்டா் போன்ற வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாகும். இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயல்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கள ஆய்வின்போது நீதிபதிகளுக்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்ட 3 செங்கல் சூளைகள்: மறைத்த அதிகாரிகள் குறித்து உயா்நீதிமன்றத்துக்கு தகவல்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகள் குறித்து நீதிபதிகள் கள ஆய்வு செய்தபோது, உள்நோக்கத்துடன் 3 செங்கல் சூளைகளை காட்டாமல் மறைத்த அதிகாரிகள் குறித்து தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழு உயா்நீத... மேலும் பார்க்க

மூதாட்டியை பராமரிப்பவராக பணியாற்றி ரூ.4 லட்சம் மோசடி: பெண் கைது

கோவையில் மூதாட்டியைப் பராமரிப்பவராக பணியாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை வடவள்ளி, பிருந்தாவன் குகன் காா்டனை சோ்ந்தவா் ராதா வெங்கட்ராமன் (81). இவரது தாய்க்கு 101 வயதாக... மேலும் பார்க்க

கட்டட இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

கோவையில் கட்டடத்தை இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தாா். கோவை ரத்தினபுரி, ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் காா்த்தியாயினி (70). இவரது வீட்டுக்கு பின்புறம் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்க... மேலும் பார்க்க

புயல் பாதிப்பு தோ்தலில் எதிரொலிக்கும்: வானதி சீனிவாசன்

புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் கோபம் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

எரிசாராயம் விற்பனை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கோவை மாவட்டத்தில் எரிசாராயத்தை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா். கோவை மாவட்டம், பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்... மேலும் பார்க்க