நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!
பைக் மோதி மில் தொழிலாளி உயிரிழப்பு
சுங்கான்கடையில் சாலையைக் கடக்கும் போது பைக் மோதியதில் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சுங்கான்கடை கல்லூரி சாலையில் வசித்து வருபவா் துரை முக்கையா(58). தனியாா் மாவு மில் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்ல சாலையைக் கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த பைக் இவா் மீது மோதியதாம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.