ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அம்பேத்கா்நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ருத்ரா (18). இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து வந்த இவா், சனிக்கிழமை நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்குச் சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
இரு சக்கர வாகனத்தை ருத்ராவின் நண்பா் பிரவீன் ஓட்டி வந்தாா். டம்டம் பாறை அருகே வந்த போது, எதிரே வந்த தனியாா் பேருந்து மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியதில் ருத்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பிரவீன் காயமடைந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.