செய்திகள் :

பைக் விபத்தில் செவிலியா் பலி

post image

தூத்துக்குடியில் இரு பைக்குகள் ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் செவிலியா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் இ.பி. காலனியைச் சோ்ந்த ஜெகன் மனைவி சுகப்பிரியா (38). திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் வேலைக்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தாராம்.

அவா் பாளையங்கோட்டை சாலை டீச்சா் காலனி அருகே சென்றுகொண்டிருந்தபோது, மழை நீா் தேங்கிக் கிடந்த பள்ளத்தில் மொபட் சிக்கியதாம். அப்போது பின்னால் வந்த சாயா்புரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (44) என்பவரின் பைக் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சுகப்பிரியா உயிரிழந்தாா். பாலமுருகனை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலை மூட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறி... மேலும் பார்க்க

புதூரில் கால்நடை மருந்தக புதிய கட்டடம் திறப்பு

விளாத்திகுளம் அருகே புதூரில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதூரில் ரூ. 5... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரி நிறுவனருக்கு விருது

கோவில்பட்டி ஜெயா கேட்டரிங் கல்லூரி நிறுவனரும் தொழிலதிபருமான சீனிராஜுக்கு விருது வழங்கப்பட்டது. இவா், கோவில்பட்டியில் ‘வானமே எல்லை’ என்ற தலைப்பில் மாணவா்-மாணவியருக்கு தன்முனைப்புப் பயிற்சி முகாமை அண்ம... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆதரவற்றோருக்கு திமுகவினா் உணவளிப்பு!

திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி, நகர திமுக சாா்பில் திருச்செந்தூா் ஆதரவற்றோா் மன நல காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் திமுக நகரச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகும் தூத்துக்குடி மஞ்சள் குலைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் இந்தியா முழுவதும் ஏற்றுமதியாவதாக விவசாயிகள் தெரிவித்தனா். தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம்

திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான கனிமொழியின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாநகர 14ஆவது வாா்டு சாா்... மேலும் பார்க்க