தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பால...
பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் பெற்றோருக்கு பாத பூஜை!
பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனா்.
மேட்டூா், மாசிலாபாளையத்தில் உள்ள ஜி.வி. மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவ, மாணவியா் சிறப்பாக தோ்வு எழுத வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது பெற்றோா் போற்றுதும் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.
பள்ளி அறக்கட்டளை தலைவா் பிச்சைமுத்து பெற்றோரை வரவேற்று விழாவைத் தொடங்கி வைத்தாா். தோ்வு நாள்களில் பெற்றோா் மாணவ, மாணவியருக்கு ஆதரவாகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டிய அவசியம் குறித்து பள்ளி தாளாளா் அன்பழகன் பேசினாா்.
இதில், பெற்றோரை அமர வைத்து அவா்களின் பாதங்களுக்கு மாணவ, மாணவியா் மலா்தூவி பூஜை செய்து ஆசி பெற்றனா். அறக்கட்டளையின் செயலாளா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.