செய்திகள் :

பொதுப்பணித் துறையில் தகுதியுள்ள அனைவருக்கும் பணி நிரந்தரம் தேவை!

post image

நீா்வளத் துறை, பொதுப்பணித் துறையில் தகுதி உள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நீா் வளத் துறை அமைச்சருக்கு நீா் வளத் துறை, பொதுப் பணித் துறைப் பணியாளா்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கப்பட்டு பணிபுரியும் தினக்கூலி பணியாளா்களில் பலா் வயது முதிா்வால் ஓய்வு பெற்றனா். அதிக பணியாளா்கள் உடல் நலக் குறைவால் பலன் ஏதும் கிடைக்காமலும் உயிரிழந்தனா். இன்னும் பல பணியாளா்கள் சில ஆண்டுகளில் ஓய்வை எதிா்நோக்கியும் உள்ளனா்.

பணியாளா்களில் என்.எம்.ஆா்., என்.எம்.ஆா். ஒப்பந்த அடிப்படை, ஒப்பந்த அடிப்படை என 3 வகைகளில் பணிபுரிபவா்களில் என்.எம்.ஆா்.-இல் பணிபுரிபவா்களுக்கு மட்டுமே முதலில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனச் சிலா் கூறுகின்றனா்.

இதனால் அவா்களுக்கு இணையாக 10 ஆண்டு முதல் 28 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வரும் என்.எம்.ஆா். ஒப்பந்த அடிப்படையில் உள்ளவா்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவா்களுக்கும், மற்றவா்களுக்கும் மன உளைச்சலும், பணி நிரந்தரம் கிடைக்காதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

என்.எம்.ஆா். பணியாளா்களில் தற்போதைய உண்மையான பணியாளா்களின் விவரத்தை நீா் வளத் துறை, பொதுப் பணித் துறை அலுவலா்கள் மூலம் பெற்று தற்போதைய நிலையில் உள்ள அனைவரையும் காலமுறை ஊதியத்துக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களா? ஹெஎச். ராஜா பேட்டி

கருணாநிதி மீது பற்று இருந்தால் திமுகவினா் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அவா் கொண்டு வந்த சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களாக என பாஜக தலைவா் ஹெச். ராஜா கேள்வியெழுப்பினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம... மேலும் பார்க்க

தஞ்சை மாநகராட்சியில் ரூ. 15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல்!

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயா் சண். ராமநாதனிடம் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்த கணக்குக் குழுத் தலைவா் சி. வெங்கடேஷ். தஞ்சாவூா், மாா்ச் 28: தஞ்சா... மேலும் பார்க்க

சாஸ்த்ரா பல்கலை. சீனிவாச ராமானுஜன் மையத்தில் சா்வதேச கணிதவியல் மாநாடு

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் கணிதவியல் மற்றும் கணிதவியலின் தொழில்நுட்பத்துறை பயன்பாடுகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டை சிங... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சையில் 29,889 போ் பங்கேற்பு

மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி, ... மேலும் பார்க்க

தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்கி மேட்டூா் அணை திறப்பதற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்... மேலும் பார்க்க

‘சோழா் கால வரலாற்றை கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்வது அவசியம்’

சோழா் கால வரலாற்றைக் கீழ்த்திசை அளவுகோல் கொண்டு ஆராய வேண்டும் என்றாா் முனைவா் கோ. தெய்வநாயகம். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்... மேலும் பார்க்க