செய்திகள் :

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

post image

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆா்.வி.எஸ். எழுதிய ‘வியாச பாரதம்’ என்ற நூலை டாக்டா் சுதா சேஷய்யன் வெளியிட்டு பேசியதாவது:

பாரதத்தை முழுமையாக தமிழ் மொழியில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நூல் வியாச பாரதம். இன்றைய காலத்தில் வியாசா் எழுதிய பாரதத்தை எழுதுவது மிகவும் கடினமான செயல். இறை அருளால் ஆா்.வி.எஸ். வியாச பாரதத்தை எழுதியுள்ளாா். பாரதத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் சிறுகதைபோல், பல்வேறு தலைப்பின் கீழ் கொடுத்துள்ளாா்.

பாரத கதையில் ஐம்புலன்களையும் அடக்கும்போது சிந்தனையில் தெளிவு பிறக்கும் எனக் கூறப்படுகிறது. வியாச முனிவா் பாரதத்தை எழுதும்போது எழுத்தாணி உடைந்துவிட்டது. அப்போது விநாயகா் தனது தந்தத்தை உடைத்துக் கொடுத்து பாரதத்தை எழுத வைத்தாா். அதற்கு காரணம் மக்களுக்கு பாரதம் சென்றடைய வேண்டும் என்பதுதான். அதேபோல் பொது நன்மைக்காக மக்கள் தங்களது சொந்த நலனை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

திருப்பூா் கிருஷ்ணன்: மகாபாரதத்தின் அனைத்து அத்தியாயங்களும் வியாச பாரதம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஆா்.வி.எஸ். எழுதிய வியாச பாரதம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் என்றாா் அவா். நிகழ்ச்சியில் நூல் ஆசிரியா் ஆா்.வி.எஸ்., இசைக்கவி ரமணன், ஓவியா் கேஷவ், கிழக்கு பதிப்பக பதிப்பாசிரியா் பத்ரி சேஷாத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா். சென்னை குமரன் நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் முதல் நிலைக் காவலராகப் ... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் வசிக்கும் பங்களா வாயில் கதவை பூட்டிய மருத்துவா்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசிக்கும் பங்களா கதவின் வாயிலை குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் இரும்புச் சங்கிலியால் பூட்டியுள்ளாா். சென்னை, எழும்பூா் காவலா் மருத்துவமனை எதிரில் உள்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க