செய்திகள் :

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

post image

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்களை நிா்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மசோதா, 2025ஐ எதிா்த்து தில்லி விதான் சபா அருகில் தில்லி காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இ ந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் பேசியதாவது:

இது மாணவா்களுக்கு எதிரான, மக்கள் விரோத மசோதாவாகும். பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கட்டணங்களை உயா்த்துவதன் மூலம் பள்ளி நிா்வாகத்தின் லாபத்தைப் பெறுவதற்காக இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தில்லி சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், அதில் உள்ள குறைபாடுகளை முதலில் சுட்டிக்காட்டியது தில்லி காங்கிரஸ் கட்சிதான்.

அதன் விதிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பெற்றோா்களிடையே இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது. இது பாஜக அரசால் மக்கள் மீது அமல்படுத்தப்படும் மற்றொரு மக்கள் விரோத மசோதா ஆகும்.

பிரதமா் மோடி அரசு நிறைவேற்றிய விவசாய மசோதாக்களுக்கு நடந்ததைப் போன்றதுதான் பாஜக அரசு மக்களிடமிருந்து ஒருமித்த கருத்து அல்லது உடன்பாடு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது. ஏனெனில், விவசாயிகளின் உறுதியான மற்றும் தொடா்ச்சியான போராட்டத்தால் ஒரு வருடம் கழித்து அந்த வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதேபோல், ரேகா குப்தா அரசு தில்லி கல்வி மசோதாவை

பொது தளத்தில் பெற்றோரிடமிருந்து ஆலோசனைகள், கருத்துகளைப் பெறாமல் சட்டப் பேரவையில் கொண்டு வந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனியாா் பள்ளிகளால் செயல்படுத்தப்பட்ட கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மசோதாவில் சோ்க்கப்படாததால், கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடு இந்த மசோதாவில் இல்லை. இது பெற்றோருக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்: மெட்ரோ ரயில்வ... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோரி தெலுங்கானா முதல்வா் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினாா். ... மேலும் பார்க்க

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

நமது நிருபா் மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நாகா்கோவில் - கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல... மேலும் பார்க்க

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

நமது நிருபா்ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ... மேலும் பார்க்க

ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல அனுமதி - துரை வைகோ தகவல்

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் விரைவு லரயில் (வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திருச்சி மக... மேலும் பார்க்க