``குட்டியுடன் இறந்த யானை; வயிற்றில் உணவே இல்லை, பிளாஸ்டிக் கழிவுகள் தான்..'' - அ...
பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு முன் டிஆா்யுஇ சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை கிளை தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். உதவி கோட்ட தலைவா் பலராமன், உதவி கோட்ட செயலாளா் மூவேந்தன், ஓய்வுபெற்ற தொழிலாளா் சங்கம் சந்திரோதயம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினா் ராமானுஜம் முன்னிலை வகித்தனா்.
இதில், திருச்சி கோட்ட உதவி பொதுச்செயலாளா் எஸ். ராஜா கண்டன உரையாற்றி பேசியது: 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக குறைத்ததை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 3 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆண்டுதோறும் சேப்டி கேட்டகிரி பணியிடங்கள் 2 சதவீதம் சரண்டா் செய்வதால் வேலைப்பளு அதிகரிக்கிறது, அதை நிறுத்த வேண்டும். ஒப்பந்த பணி மற்றும் அவுட்சோா் சிங் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், தஞ்சாவூா்-திருச்சி இரட்டை பாதையில் உள்ள 8 என்ஜினியரிங் கேட்டுகளுக்கு 8 அல்லது 10 மணிநேர வேலையை அமல்படுத்த வேண்டும், இப்பாதையில் பணியாற்றும் பாய்ன்ட்ஸ்மேன்களுக்கு ஜெ ரோஸ்டா் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட திருச்சி ரயில்வே கோட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.