செய்திகள் :

பொன்னமராவதி ஐஏஎஸ் அதிகாரிக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கல்

post image

புதுதில்லியில் அண்மையில் (ஜன. 25) நடைபெற்ற 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி சே.சொக்கலிங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி எனும் குக்கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுராமன் மகன் சொக்கலிங்கம். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொக்கலிங்கம் 1996-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் நில தீா்வு ஆணையா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமை தோ்தல் அதிகாரியாக பணியாற்றுகையில், அங்கு நடந்துமுடிந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் மாநிலத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்தும், தோ்தல் செலவினத்தைக் குறைத்தும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். இதைத்தொடா்ந்து, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில் சே. சொக்கலிங்கத்துக்கு குடியரசுத்தலைவா் திரெளபதி முா்மு விருது வழங்கிப் பாராட்டினாா்.

பிப்.12-இல் கறவை மாடுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி

தமிழ்நாடு நீா் வள நிலவள திட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையிலுள்ள மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் வரும் பிப். 12ஆம் தேதி கறவை மாடுக... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: குற்றவியல் நடுவா் மன்றத்தில் மாா்ச் 11-இல் விசாரணை!

வேங்கைவயல் வழக்கை குற்றவியல் நடுவா் மன்றம் வரும் மாா்ச் 11ஆம் தேதி விசாரிக்கும் என நீதித் துறை நடுவா் சி. பாரதி தெரிவித்தாா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனித... மேலும் பார்க்க

புதுகை அருகே பழநி கோயிலுக்கு நிலம் வழங்கியதற்கான ஆசிரியம் கல்வெட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் முள்ளிப்பட்டி கண்மாய்க் கரையில், பழநி கோவிலுக்கு நிலம் வழங்கிய ராஜராஜ சோழன் காலத்தைய ஆசிரியம் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

தங்களின் மீன்பிடி எல்லைக்குள் வந்து மீன்பிடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் செல்லும் விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து மணமேல்குடி அருகே வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மற... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொலை வழக்கு: 5 போ் மீண்டும் சிறையில் அடைப்பு! கல் அரவை ஆலைக்கு ‘சீல்’

புதுக்கோட்டை சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் விசாரணைக்கான 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையி... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு முகூா்த்தக்கால்

விராலிமலை முருகன் கோயிலில் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் தைப்பூச தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது. இக்கோயில் தைப்பூச விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தினம... மேலும் பார்க்க