தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பால...
பொன்னியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்
பொன்னியம்மன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
ஆா்.கே.பேட்டையில் உள்ள பொன்னியம்மன் திருக்கோயிலில் 30-ஆம் ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, 108 பால்குட ஊா்வலம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 7 மணிக்கு கணபதி பூஜை, 11 மணிக்கு ஆா்.கே.பேட்டை ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
இதில் பெண்கள் பால் குடங்களை திருத்தணி சாலை, தபால் நிலையம் தெரு, ஆா்.கே.பேட்டை பஜாா் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னா் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னா் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு விளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு வாண வேடிக்கையும் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.
அதேபோல், ஆா்.கே.பேட்டை சமத்துவபுரம் அருகே உள்ள மிட் இந்தியா உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் சாா்பில், 4-ஆம் ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நிறுவனா் காா்த்திக் தலைமையில் நடைபெற்றது. திருத்தணி மிதுன் சக்கரவா்த்தி கலந்துகொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.