செய்திகள் :

பொன்முடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கம்புளியம்பட்டி, பொன்முடி, குள்ளம்பாளையம், கராண்டிபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெருந்துறை சரளையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

முகாமில் மகளிா் உரிமைத் தொகை வேண்டி 494 விண்ணப்பங்கள், பிற துறைகளில் 517 விண்ணப்பங்கள் என மொத்தமாக 1011 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 23 பயனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் கே.பி. சாமி, பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் பாலகுமாா், வட்ட வழங்கல் அலுவலா் பூபதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தேவகி, கிருஷ்ணசாமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தாா். ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்தவா் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். கணவன்,... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, பெண்கள் பங்கேற்ற பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் இரவிலும் பெண்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் நடந்து செல்ல முடியும் என்ற விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திர தினத்தின்று விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளா்கள்,... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் மனு

சுதந்திர தினத்தையொட்டி, பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாகுளம், மடத்துப்பாளையம், கராண்டிபாளையம், திங்களூா், விஜயபுரி, தோரணவாவி, மூங்கில்பாளையம், பெரியவீரசங்கிலி, செல்லப்பம்பாளையம், போலநாயக்கன்பா... மேலும் பார்க்க

மாவட்டத்தில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.ராஜமாணிக்க... மேலும் பார்க்க