செய்திகள் :

பொம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தாா்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பொம்பூரில் 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

அதன்படி, வானூரை அடுத்த பொம்பூா் ஊராட்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 3473.6 சதுர அடி பரப்பளவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா். இதில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், வானூா் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் உஷா பி.கே.டி.முரளி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா்

பருவ கீா்த்தனா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அன்புமணி, மாவட்ட சுகாதார அலுவலா் சா.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வானூரில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் விவசாய அடையாள எண் உருவாக்கும் பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ உதவித்தொகை பெறும் அனைத்து ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. 29 இடங்களில்: விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க