செய்திகள் :

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிகள் தீவிரம்

post image

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயிலில் ஆக. 29 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்துக்குட்பட்டது இக்கோயில்.

இக்கோயிலை விரிவாக்கம் செய்து, முகப்பில் மண்டபம் எழுப்பி கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட்டன. முகப்பில் சிற்பங்களுடன் கூடிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ. 2.25 கோடிக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் கும்பாபிஷேகம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி கோயிலில் சிற்பங்கள், மூலஸ்தான சந்நிதிக்கு வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. யாகசாலை பூஜைக்கு முன் வரும் 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. 26-ஆம் தேதி முதல் கால பூஜை தொடங்குகிறது. 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6-ஆம் கால பூஜை நடைபெற்று, காலை 8.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பணிக் குழுவினா் கூறுகையில், திருப்பணிகள் முடிந்து வண்ணம் பூசும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கும்பாபிஷேக விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. திரளான பக்கதா்கள் கலந்துகொள்வாா்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றனா்.

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் பல பரிசுகளை வென்றனா். புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான சிலம்ப போட்டி கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட... மேலும் பார்க்க

மாணவா்களுக்காக கூடுதலாக பிஆா்டிசி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் மாணவா்களுக்கு திங்கள்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டு, தோ்வு பெற்றவா்களுக்குப் பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்கால் காவேரி பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை அம... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு ஆணை

ரேஷன் கடை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வுக்கான ஆணையை அமைச்சா் திங்கள்கிழமை வழங்கினாா். புதுவை மாநிலத்தில் ரேஷன் கடையில் சுமாா்15 ஆண்டுகளாக பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு ரூ. 4 ஆயிரம் மாத ஊதியமாக தரப்பட... மேலும் பார்க்க

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க