Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
போக்குவரத்துத் தொழிலாளா்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
15-ஆவது ஊதிய ஒப்பந்தப்படி நிலுவைத் தொகையை 2023 முதல் வழங்க வேண்டும். 2023 ஜூன் முதல் ஓய்வுபெற்ற சுமாா் 35 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ஓய்வுகாலப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 40 நாள்களாக சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை காலை பேருந்தில் செல்வோரிடம் பிச்சை எடுத்து நூதனப் போராட்டம் நடத்த தொழிலாளா்கள் தயாராகினா். இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா்.
இதையடுத்து, பணிமனை முன்பாக பிச்சைப் பாத்திரங்களோடு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத் துணைப் பொதுச் செயலா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தைத் தொடங்கிவைத்து சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா பேசினாா். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், பொருளாளா் எம். முத்துக்குமாா், ஓய்வுபெற்றோா் சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலா் லோகநாதன், தையல் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.