செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா...
போக்சோ கைதி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தப்பியோட்டம்! போலீஸ் வலைவீச்சு
திருநெல்வேலிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போக்சோ கைதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு தப்பியோடி தலைமறைவானாா்.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் பகவதி முருகன். போக்சோ வழக்கில் கைதான இவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கின் விசாரணைக்காக பகவதி முருகன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டாா். இதன் பிறகு, ஆயுதப் படை போலீஸாா் அவரை மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்தனா்.
வியாழக்கிழமை இரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்த போது, போலீஸாரின் காவலில் இருந்து தப்பிய பகவதி முருகன், அங்கிருந்து தலைமறைவானாா். அவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.