போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
தேனி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்து.
ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் விடுதி உதவி காப்பாளராகப் பணியாற்றி வந்தவா் முகிலன் (29). இவரை 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த 2023, மாா்ச் 27-ஆம் தேதி ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகிலனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவம், கல்வி, பராமரிப்பு செலவுக்கு அரசு நிவாரணமாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சிறுவனின் பெயரில் ரூ.3 லட்சம் வைப்புத் தொகையாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.