BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
போக்ஸோவில் இளைஞா் கைது
ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோா், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 4 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியிடம் விசாரித்ததில், ஆா்.கே.பேட்டை வட்டம், எரும்பி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் என்ற இளைஞா் மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கா்ப்பமாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.