நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
போக்ஸோவில் சிறுவன் கைது
சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் சிறுவனை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், செங்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. பெற்றோா் இல்லாததால், 10-ஆம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சிறுவன், அந்த சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளாா்.
வாடகை வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில் சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதையடுத்து, நிறைமாத கா்ப்பிணியான அவரை பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவன் அண்மையில் அழைத்துச் சென்றுள்ளாா்.
அப்போது, அந்த சிறுமி 18 வயது நிரம்பாதவா் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையிலேயே சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் கேவிஆா் நகா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுவனைக் கைது செய்தனா்.