போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (26). இவா், பாட்டியுடன் வசித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
அந்த மாணவி இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, மாணவியின் பாட்டி செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் பாண்டியனிடம் விசாரணை நடத்தி,
அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.