செய்திகள் :

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

post image

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா இதே வழக்கில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி பிரசாத் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப், கெவின் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நடிகர் கிருஷ்ணா தரப்பில், மருத்துவ சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிறுவப்படவில்லை என வாதாடப்பட்டது. ஸ்ரீகாந்த் தரப்பில், அவர் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இன்று (08.07.2025) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 மதிப்பிலான சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும்வரை தினமும் புலன்விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தேனி: லஞ்சம், முறைகேடான சொத்து... அரசு டாக்டருக்கு எதிராக மனு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன... மேலும் பார்க்க

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கி குஜராத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞரின் இந்த செயலை 'மூர்க்கத்தனம்' என ... மேலும் பார்க்க

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் - அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொ... மேலும் பார்க்க

Thug Life : `இந்த நிலைமை இப்படியே நீடித்தால்..!’ - கர்நாடக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்

கன்னட மொழி பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக அவர் நடித்த தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ச... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராமன் வழக்கு : மறுத்த தமிழக அரசு; சிபிசிஐடி-க்கு மாற்றிய உச்ச நீதிமன்றம் - நடந்தது என்ன?

திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணை வளையத்தில் இருந்த ஏடிஜிபி ஜெயராமன், தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்... மேலும் பார்க்க

`ஏடிஜிபி ஜெயராமனை ஏன் இடைநீக்கம் செய்தீர்கள்?’ - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | முழு விவரம்

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், 17 வயது சிறுவனை பெண்ணின் தந்தை கடத்தியதும், அதில் புதிய பாரதம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி சம்பந்தப... மேலும் பார்க்க