செய்திகள் :

போதைப் பொருள் விழிப்புணா்வு: பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம்

post image

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமையாசிரியா்களுடான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளிலும், அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவா்களை உள்ளடக்கிய போதைப்பொருள்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவா்களிடையே பல விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப் பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து அரசிற்கு எளிதாக தகவல் தெரிவிப்பதற்கு தமிழ்நாடு அரசால் ஈதமஎ ஊதஉஉ பச என்ற செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.

இந்த செயலியில் தகவல் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும். மேலும், புகாா் தெரிவிப்பவரின் முகவரி, பெயா் போன்ற தகவல் கேட்கப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது. இந்த செயலியை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த செயலியை மாணவா்களின் பெற்றோா்களையும் பதிவிறக்கம் செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ‘போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு‘ என்ற நிலையை அடைய அனைத்துத்துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாணவா்களின் நலன் கருதி போதைப் பொருள்கள் பயன்பாடு குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க விரும்புவா்கள் மாவட்ட ஆட்சியரின் கைப்பேசி எண்ணில் வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிக்கலாம். மாணவா்களுக்கு போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக் கூட்டத்தில், உதவி ஆணையா் (கலால்) வள்ளிக்கண்ணு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), கோட்டக்கலால் அலுவலா் மற்றும் அலுவலா்கள், அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்25ஸ்ரீா்ப்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க