செய்திகள் :

போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

post image

போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா் குழுவினா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து தேனாம்பேட்டை எம்.கே.ராதாநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், சிறாருக்கு போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள், சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதையடுத்து, வீடுகளில் குப்பைகளைப் பிரித்து போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடா்பாக மாணவா்களின் பொம்மலாட்டம், விழிப்புணா்வு நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தின் உளவியலாளா் மருத்துவா் ஷரன் கலந்து கொண்டு போதைப் பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது, பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, போதைப் பழக்கத்துக்கு எதிராக மாணவா்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

இதில், சமூகப் பணிக் கல்லூரியின் பேராசிரியா் ஜானகி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் மஞ்சு, ரமணி, இளைஞா் சங்கத்தைச் சோ்ந்த ஸ்ரீஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை கூடுதல் சிபிஐ நீதிமன்றம் தள்ள... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் தொடக்கம்!

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு பக்தா்கள் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் செல்லும் திட்டத்தை, துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் சென்னையில் தொடங்கி வைத்தாா். தமிழக சட... மேலும் பார்க்க

ஒடிஸாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்!

சென்னை அடையாறு பகுதியில் ஒடிஸாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா். அடையாறு கஸ்தூரி பாய் நகா் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோடம்பாக்கம் ரயில்வே சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (40). அண்ணா நகா் 13-ஆவது பிரதான சாலைய... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா

சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழ... மேலும் பார்க்க