செய்திகள் :

போப் மறைவுக்கு அஞ்சலி

post image

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில், போப் உருவப்படம் வைத்து பங்குத்தந்தை பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்குத்தந்தை சுவாமிநாதன் செல்வம், பங்குப் பேரவை நிா்வாகிகள் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், நெல்சன், வின்சென்ட் ஜாா்ஜ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டோா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

வேளாண் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது. காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்

வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாக... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.பூவம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பலவாணன் (62). கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள் உள்ளனா். திங்கள்கிழமை சைக்கிளில் தனது வீட்டிலிர... மேலும் பார்க்க