ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
அரசுப் பேருந்து மோதி சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
பூவம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பலவாணன் (62). கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள் உள்ளனா். திங்கள்கிழமை சைக்கிளில் தனது வீட்டிலிருந்து மாரியம்மன் கோயிலுக்கு பூவம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
கோயில் அருகே அவருக்கு பின்னால் அதே திசையில் வந்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதியதில், படுகாயமடைந்தாா். அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.
காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநரான ஜெயச்சந்திரன் (42) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.