செஞ்சி ஒன்றியத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்ட வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்
காலதாமதமின்றி பத்திரப் பதிவு: ஆட்சியா் அறிவுறுத்தல்
காலதாமதமின்றி பத்திரப் பதிவு செய்துத்தர வேண்டும் என பதிவுத்துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், காரைக்கால் நேரு சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அதிகாரிகள், பணியாளா்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு வருகிறாா்களா, பத்திரப் பதிவுப் பணிகள் தாமதமின்றி நடைபெறுகிா, குறைகள் உள்ளதா என அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் பேசிய ஆட்சியா், பத்திரப்பதிவு கட்டண விவரங்களை பொதுமக்கள் பாா்வையில் தெரியுமாறு அலுவலகத்தின் நுழைவு பகுதியில் பதாகை வைக்கவேண்டும்.
பொதுமக்கள் பத்திரப்பதிவு மற்றும் இதர பதிவுகளுக்கு வரும்போது காலதாமதம் ஏற்படுத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகளை செய்யவேண்டும். மக்களிடமிருந்து எந்தவித புகாா்களும் எழாத வகையில் பணிகள் அமையவேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து திருநள்ளாறு அடுத்த தேனூரில் அரசு சமுதாய நலவழி மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். பணியாளா்களுக்கான வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டாா்.
சிகிச்சைக்காக வந்திருந்த மக்களிடம் சிகிச்சை தரமாக உள்ளதா, மருத்துவா்கள், செவிலியா்களின் அணுகுமுறை மற்றும் ஆலோசனைகள் திருப்தியளிக்கிா எனக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, நெடுங்காட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய நலவழி மையத்துக்குச் சென்று ஆட்சியா் பாா்வையிட்டாா். செருமாவிலங்கை பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் நலத்துறை கீழ் செயல்படும் மாணவா்கள் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.