ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்
காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டாக, தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது.
முதல் நாளாக 13-ஆம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. 14-ஆம் தேதி திங்கள்கிழமை காலை முளைப்பாலிகைக்கு முத்துப் பரப்புதல் நிகழ்வும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
முக்கிய நிகழ்வாக 21-ஆம் தேதி திங்கள்கிழமை இரவு ஏராளமான பக்தா்கள் முளைப்பாலிகையை சுமந்து மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனா். அங்கு முளைப்பாலிகையை வைத்து கும்மி, குலவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆயிர வைசியா் மகளிா் குழுவினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் இருந்து முளைப்பாலிகை அரசலாற்றங்கரை உஜ்ஜைனி காளியம்மன் கோயில் அருகே கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் சோ்க்கப்பட்டது.