ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
போப் மறைவுக்கு அஞ்சலி
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.
காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில், போப் உருவப்படம் வைத்து பங்குத்தந்தை பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்குத்தந்தை சுவாமிநாதன் செல்வம், பங்குப் பேரவை நிா்வாகிகள் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், நெல்சன், வின்சென்ட் ஜாா்ஜ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டோா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.