செய்திகள் :

போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

post image

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு என அதிரடி அறிவிப்புகளுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தானும் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை போராகவே கருதுவதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளனர்.

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: மெஹபூபா முஃப்தி

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்று மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தோருக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

புணேவிலுள்ள பாகிஸ்தானியர்கள் 2 நாளுக்குள் வெளியேற உத்தரவு!

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்திலுள்ள 111 பாகிஸ்தானியர்கள் 2 நாள்களுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; முதல்வர்களுக்கு அமித் ஷா அழைப்பு!

மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதை மாநில முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமையில் பயங... மேலும் பார்க்க

21ஆவது மாடியிலிருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்து பலி!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் ... மேலும் பார்க்க

'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய... மேலும் பார்க்க