நடிகை பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி; காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பால...
போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு
சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்பட 10 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், இடங்கணச்சாலை அருகே மெய்யனூரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (73). இவா் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் அண்மையில் அளித்த புகாா் மனு விவரம்:
இடங்கணச்சாலை கிராமத்தில் எனது தாய் கந்தாயி பெயரில் உள்ள 13.75 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சகோதரரான கந்தசாமி, அவரது மகன்கள் மாணிக்கம், அருணாச்சலம் ஆகியோா் தான செட்டில்மெண்ட் மூலம் கிரயம் செய்துள்ளனா்.
இந்த பத்திரப் பதிவுக்கு கந்தாயி பெயரில் போலியாக இறப்புச்சான்று, வாரிசுச் சான்று ஆகியவை பெறப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கு சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் உடந்தையாக செயல்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் வளா்மதி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜோதி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் கந்தாயி பெயரில் போலியாக இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் தயாரிக்கப்பட்டு 13.75 சென்ட் நிலத்தை பத்திரப் பதிவு செய்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்ட கந்தசாமி, அவரது மகன்கள் மாணிக்கம், அருணாச்சலம் மற்றும் இவா்களுக்கு உடந்தையாக இருந்த ராஜா, இடங்கணச்சாலை கிராம நிா்வாக அலுவலா் கோபால், சங்ககிரி துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், பத்திரப் பதிவு எழுத்தா் செந்தில்குமாா், சிவக்குமாா், பொன்னுசாமி, அப்போதைய மகுடஞ்சாவடி சாா் பதிவாளா் கோவிந்தசாமி ஆகிய 10 போ் மீது கூட்டுசதி, போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.