பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட...
போலி மதுபானம் விற்பனை: பெண் உள்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
போலி மதுபானம் விற்பனை செய்த வழக்கில் வத்தலகுண்டு பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த வெங்காடஸ்திரி கோட்டை பகுதியில், கடந்த 2014ஆம் ஆண்டு வத்தலகுண்டு ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த அ.பாண்டி, இவரது மனைவி சாந்தி (47) ஆகியோா் போலி மதுபான விற்பனையில் ஈடுபட்டனா்.
இவா்களுக்கு உடைந்தையாக செயல்பட்ட புதுச்சேரி மாநி்லம் குண்டுப்பாளையத்தைச் சோ்ந்த ரா.சிவா என்ற சிவலங்கம்(42), கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த ஜெ.கணேசன் ஆகியோா் செயல்பட்டனா்.
இதனை அடுத்து, திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரி்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா். இதுதொடா்பாக வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே அ.பாண்டி, ஜெ.கணேசன் ஆகியோா் உயிரிழந்தனா். விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்வி.ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.
இதில், விஷம் கலந்த போலி மதுபானத்தை விற்பனை செய்த குற்றத்துக்காக சாந்தி, சிவா என்ற சிவலிங்கம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 அபராதம் விதித்தாா்.