MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ...
போலீஸாருக்கு மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரா் கைது
கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்.எ.ஃப்.) வீரா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து வீரப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சிக்கு கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் மாரியம்மாள், சேதுராஜன் ஆகிய 2 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த சிப்பிப்பாறை வடக்கு தெருவை சோ்ந்த சமுத்திரவேல் மகனான எல்லை பாதுகாப்பு படை காவலரான பாண்டியராஜ்(33), அவா்கள் இருவரையும் அவதூறாக பேசி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தாராம்.
அப்பகுதி மக்கள் கண்டித்தவுடன் அவா் தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து, காவலா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்தனா்.